பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 246 அதிகாரம் 21 நினைந்தவர் புலம்பல் 13. முன்பு கூடி நுகர்ந்த இன்பத்தைப் பின்பு நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைத் தருவதனால் உண்டல் மட்டும் மகிழ்ச்சிதரும் கள்ளைவிடக் காமமே இன்பம் நல்குவதாகும். 22. யாம் விரும்புகின்ற காதலரை நினைத்தாலும் பிரிவுத் துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவு அளவினதானாலும் ஒருவகையில் இன்பம் தருவதாகும். 203 தும்மல் வருவதுபோல்தோன்றி வராமல் அடங்கி விடு கின்றதே அதனால் நம் காதலர் நம்மை நினைப்பவர் போலிருந்து தினையாமற் போயினரே? 20.எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் எப்பொழுதுமே உள்ளார். அது போலவே, நாமும் அவருடைய நெஞ்சில் எப்பொழுதும் நீங்காமல் இருக்கின்றோமே? 1205, தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் செய்து கொண்டநம் காதலர் நம் உள்ளத்தில் தாம் ஓயாமல் வருவதைப் பற்றி நாணப்படமாட்டாரோ? 1206 காதலராகிய அவரோடு யான் இன்பமாயிருந்த அந்த நாட்களின் நினைவால்தான், நான் உயிரோடு உள்ளேன். வேறு எதனால் நான் அவரைப் பிரிந்து உயிர் வாழ்கின்றேன்? 20. காதலரை மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ? 1208. காதலரை எவ்வளவு அதிகமாக நினைத்தாலும் என் மீது சினங்கொள்ளார். காதலர் செய்யும் சிறந்த உதவியே.அதுதான் 1299. நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும்அவர், இப்போது அன்பில்லாமல் இருப்பதை மிகவும் நினைந்து என் இனிய உயிர் அழிகின்றது. * - • , 120. திங்களே என் உள்ளத்தில் பிரியாதிருந்து என்னைப் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காண்பதற்காக நீயும் வனத்தில் மறைந்துவிடாது இருப்பாயாக.