பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 254 அதிகாரம் 25 நெஞ்சொடு கிளத்தல் 24. நெஞ்சமே காதலால் வளர்ந்த இத்துன்பம் தரும் நோயினைத் தீர்க்கும் மருந்து ஏதாயினும் ஒன்றை நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்லமாட்டாயோ? 1282 என் நெஞ்சே! நீ வாழ்க அவர்தாம் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்கவும், நீ மீட்டும் அவர்ையே நினைந்து வருந்துவது தின் அறியாமையே யாகும். 1243. நெஞ்சமே என்னுடன் இருந்தும் அவரை தினைந்து வருந்துவது ஏன்? இத்துன்ப நோயை விளைவித்தவரிடம் நம்மேல் இவ்வாறு அன்புற்று நினைக்கும் பண்பு இல்லையே! 24. நெஞ்சமே நீ அவரிடம் ஏகும்போது என் கண்களை யும் உடன் கொண்டு செல்வாயாக அவரைக் காண வேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன. 1248. நெஞ்சமே யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர், எம்மை வெறுத்துவிட்டர் என்று நினைந்து, அவரைக் கைவிடுதல் நமக்குத் தகுமோ? 148 என் நெஞ்சமே நாம் ஊடியபோது ஊடலுடணர்த்திக் கூடுகின்றவரான காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய் பொய்யான சினங்கொண்டு காய்கின்றாய், . 24. நல்ல நெஞ்சமே ஒன்று காமத்தை விட்டுவிடு அல்லது நானத்தை விட்டுவிடு. இவை இரண்டையும் நீ விரும்பினால் என்னல் பொறுத்துக் கொண்டிருக்க இயலாது. 1248 என் நெஞ்சமே பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் இவண் போந்து அன்பு செய்யவில்லையே என்று ஏங்கிப் பிரிந்தவரின் பின்னே செல்கின்றாய்! நீ பேதைமை உடையை 1249 என் நெஞ்சமே காதலர் நம் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைந்து யாரிடம் தேடிச் செல்லு கின்றனை? - - 1250. நம்மோடு சேர்ந்திருக்காமல் கைவிட்டுச் சென்ற காதலரை நாம் நெஞ்சிலே வைத்திருக்கும்போது இன்னும் நாம் அழகிழந்து வருந்துகின்றோம். .