பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு , 268 அதிகாரம் 32 புலவி நுணுக்கம் 13i, பரத்தனே பெண்தன்மை உடையவர் எல்லாரும் தத்தம் கண்களால் நின்னைப் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர் கின்றனர். ஆதலால் நின் மார்பை யான் தழுவேன். 152 காதலரோடு யாம் பிணங்கியிருந்தோமாக, அவரும் அந்த வேளையில் யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாழ்த்துரை வழங்குவோம் என்று நினைத்துத் தும்மினார். 1313. மரக்கிளைகளில் மலர்ந்த பூவைச் சூடினாலும் என் காதலி நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்குக் காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினப்பாள். 154. யாரையும்விட நின்னையே விரும்புகின்றோம் என்று சொன்னேனாக, யாரைவிட? யாரை விட? என்று வினவிப் பிணங்கினாள். . 35. இப்பிறப்பில் யாம் பிரியோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனிவரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறைய நீரைப் பெருக்கிக் கொண்டனள், 136 நின்னை நினைத்தேன்' என்றேன். நினைப்பிற்கு முன் மறப்பு உண்டன்றோ? என்னை ஏன் மறந்தீர்? என்று கூறி என்னைத் தழுவாமல் ஊடினாள். 13. யான் தும்மினேனாக அவள் நூறாண்டு என்று கூறி. வாழ்த்தினாள் அடுத்து அதை விட்டு, யார் நினைத்ததால் தும்மினீர்? என்று வினவி அழுதாள். 138. அவள் பிணங்குவாள் என்று அஞ்சி யான் எழுந்த தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எனக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ? என அழுதாள். 139. பிணங்கியிருந்தபோது அதைத் தெளிவித்து மகிழ் வித்தாலும், நீர் மற்றி மகளிர்க்கும் இத்தன்மையவரக் ஆவீர் என்று சொல்லிச் சினப்பாள். 1320. அவளுடைய அழகையே நினைந்து அமைதியாக நோக்கினாலும் நீர் எவரையோ மனத்திற் கொண்டு ஒப்பிட்டு நோக்கினீரோ? என்று கூறிச் சினப்பாள். .