பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு $4 அதிகாரம் 7 மக்கட் பேறு 5. ஒருவன் பெறத்தக்க பேறுகளில் அறியவேண்டியவற்றை அறியவல்ல மக்களைப் பெறுவதைவிடச் சிறந்ததொன்று இருப்பதாக யாம் மதிப்பதில்லை. 62. பிறர் பழித்தற்கு இடமில்லாத நல்ல பண்புடைய மக்களைப் பெற்றால் ஒருவனுக்கு எழுவகைப் பிறப்புகளிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்றனுக. 63. தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர் மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினைப்பயனால் வந்து அடையும். 64. தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளவப்பெற்ற மிகவும் எளிமையான கூழானாலும், அது பெற்றோர்க்கு அமிழ்திலும் இனிமையுடையதாகும். 65. தம்மக்களின் உடம்பைத் தொடுதல் உடலுக்கு இன்பமாகும். அவர்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு மிகவும் இன்பம் தருவதாகும். 66. தம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழல் இசை இனியது யாழ் இசை இனியது' என்று மொழிவர். 6. தந்தை தன் மகனுக்குச் செய்ய வேண்டிய நல்லுதவி அவனைக் கற்றவர் அவையில் முதன்மை பெறும் தகுதி யுடையவனாகச் செய்தலாகும். 58. தம் மக்கள் தம்மைவிட அறிவுடையவராக இருத்தல் தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்கட்கெல்லாம் மிக்க இன்பம் பயப்பதாகும். 69. தன் மகன் நற்பண்பு நிறைந்தவன் என்று பிறர் சொல்லக் கேட்ட தாய் அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்ச்சியுறுவாள். 10. மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு இவனைப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன நோன்பு நோற்றானே? என்று பிறர் புகழ்ந்து கூறும் சொல்லேயாகும்.