பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 25 அதிகாரம் 3 அடக்கமுடைமை 12. அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்: அடங்காமை பேரிருள் ஆகிய நரகில் தள்ளிவிடும். 12 அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு பேணிப் பாதுகாத்து வருக. உயிருக்கு ஆக்கந் தருவது அதனினும் மேம் பட்ட செல்வம் இல்லை. 123. அறிய வேண்டியவற்றை அறிந்து நல்வழியில் அடக் கத்துடன் ஒழுகும் பண்பைப் பெற்றால், அந்த அடக்கம் பிறரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும். 12. தன் நிலையிலிருந்து திரிந்து போகாமல் அடங்கி யிருப்பவனின் உயர்வு மலையின் உயர்வைவிட மிகவும் பெரிய தாகும். 25. பணிவுடையவராக ஒழுகுதல் பொதுவாக எல்லார்க்கும் நன்மை பயப்பதாகும் அவருள்ளும் செல்வர்க்குச் சிறப்பாக மற்றொரு செல்வம் போன்றதாகும். 125 ஒரு பிறப்பில் ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானல், அஃது அவனுக்கு பல பிறப்பிலும் காப்பாக அமையும். 12. காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவையாவது காக்கவேண்டும் காக்கத் தவறியவர்கள் சொற் குற்றத்தில் சிக்கித் தவிப்பர். 128 தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றா யிலும் ஒருவனிடம் உண்டானால் அதனால் மற்ற அறங்களாலும் தன்மை விளையாமற் போய்விடும். 129.தீயினால் சுட்டபுண் புறத்தே வடுவாக இருந்தாலும் உள்ளே ஆதிவிடும். ஆனால் நாவினால் தீயசொல் கூறிச் சுடும் வடு என்றும் மறையவே மறையாது. 13. சினத்தை அடக்கி, கற்க வேண்டியவற்றைக் கற்று. அடக்கத்தையும் ஒருவன் மேற்கொண்டால், அவனிடம் அறக்கடவுள் சென்றடையும் சமயத்தை நோக்கி இருக்கும்.