பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 38 அதிகாரம் 18 வெஃகாமை 11. நடுவு நிலைமையன்றி பிறரது நல்ல பொருளைக் கவர ஆசை கொண்டால் அந்த ஆசை அவனது குடியைக் கெடுக்கும், அப்பொழுதே குற்றமும் வந்து சேரும். 12. நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர் பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பி அறன் அல்லாத செயல்களைச் செய்யார். 173, நிலையான இன்பத்தை விரும்புகின்றவர் நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார், 14. ஐம்புலன்களையும் வென்ற குறையில்லாத அறிவாளர்கள் தாம் வறியர் என நினைத்து அதைத் தீர்க்கப் பிறர் பொருளை விரும்பார், 15. ஒருவன் எல்விடத்தும் பொருளைக் கவர நினைத்துப் பெருந்தாதவற்றைச் செய்தால் நுட்பமாகவும் விரிவாகவும் வளர்ந்த அவனது அறிவினால் ஏதும் பயனில்லை. f, அருளை விரும்பி அறநெறியில் நின்றவன் பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத செயல்களைச் செய்ய நினைத் தால் கெட்டொழிவான். ரி. பிறர் பொருளைக் கவர விரும்புவதால் வரும் ஆக்கத்தை எவருமே விரும்பவேண்டா, அது பயன்விளைக்கும் போது அப்பயன் நன்மையாவது அரிதாகும். 18. ஒருவனது செல்வவளம் குறையாமல் இருப்பதற்குரிய வழி யாதென்றால், அவன் பிறன் பொருளைக் கவர விரும்பா திருத்தலேயாகும். 179. பிறன் பொருளை விரும்பாததே அறமென அறிந்து அதன்படி நடக்கும் அறிவுடையாரைத் திருமகள் தானே சென் றண்டவள்ள, 18. பின் நிகழ்வதைக் கருதாமல் ஒருவன் பிறன் பொருளைக் கவர விரும்பினால் அஃது அழிவைத் தரும்: அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.