பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 42 அதிகாரம் 21 தீவினையெச்சம் 20 தீயவை செய்தலாகிய இறுமாப்பைத் தீவினையுடைய பாவிகள் அஞ்சார்; ஆனால் தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அதற்கு அஞ்சுவார்கள். 202தீய செயல்கள் தமக்கும் பிறர்க்கும் தீமை விளைவித்தலால் அத்தீயச் செயல்கள் தீயினும் கொடியனவாகச் சான்றோரால் அஞ்சப்படும். 203 தமக்குத் தீமை செய்தவருக்கும் தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை அறிவுடைய செயல்கள் எல்லா வற்றிலும் தலையானது என்று கூறுவர். 204 பிறர்க்குக் கேட்டினை விளைவிக்கும் தீச் செயல்களை ஒருவன் மறந்தும் எண்ணாதிருக்க வேண்டும் எண்ணினால் எண்ணியவனுக்குக் கேடு விளையுமாறு அறக்கடவுள் எண்ணும். 205.தான் வறுமையுடையவன் என்று கருதி அதனைப்போக்கிக் கொள்ளத் தீய செயல்களைச் செய்யக் கூடாது செய்தால் மேலும் வறியனாகி வருந்துவான். 208. துன்பம் தருவனவான தீவினைகள் தன்னைத் தொடர்ந்து வருத்துதலை விரும்பாதவன் பிறருக்குத் தீய செயல்களைச் செய்தலாகாது. 20. எவ்வளவு கொடிய பகையை உடையவரும் தப்பி உய்வர், ஆனால் தீவினையாகிய பகையோ ஒருவனை விடாது தொடர்ந்து துன்புறுத்தும். 208 தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல் ஒரு வனுடைய நிழல் அவனை விடாது தொடர்ந்து வந்து அவனது காலடியில் தங்கியிருத்தலை ஒத்தது. 209, ஒருவன் தன்னுடைய நலனை விரும்புபவனானால் அவன் எத்தகையதொரு சிறிய தீச் செயலிலும் ஒருபோதும் ஈடுபடாமல் இருத்தல் வேண்டும். 20. ஒருவன் தவறான வழியில் சென்று தீய செயல்களைச் செய்யாதிருப்பாளனால் அவன் கேடற்றவன் என்பது தெளிவு.