பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 4 அதிகாரம் 22 ஒப்புரவறிதல் 2. இந்த உலகத்தர் தமக்கு நீரைக் கொடுக்கின்ற மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றனர்? அவ்வண்ணமே மழைபோன்றவர் செய்யும் உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை, 22. ஒருவன் பலவகையிலும் முயற்சி செய்து ஈட்டிய பொருள் முழுவதும் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே யாகும். 23. பிறருக்கு உதவி செய்து வாழ்தலான ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப் பகுதிகளை இவ்வுலகத்தும் வான் உலகத்தும் பெறுதல் அரிது. - 24. உலகத்திற்கு ஏற்ற கடமைகளை அறிந்து நடப்பவன் உயிரோடு வாழ்பவனாவான். அவ்வாறு செய்யாதவன் செத்தவருள் ஒருவகைக் கருதப்பெறுவான். 25. உலகினர் எல்லாரும் விரும்புமாறு உதவி செய்து வாழும்பேரறிவாளனுடையசெல்வம் ஊரில் வாழ்வார் நீருண்னும் குளம் நீர் நிறைந்தாற் போன்றது. 26 பிறருக்கு உதவி செய்பவனிடத்தில் செல்வம் உண்டா குமானால் அஃது ஊரின் நடுவேயுள்ள பழமரம் பழங்கள் பழுத்தற் போன்றது. 21. செல்வம் ஒப்புரவாகிய பேருந் தகுதியுடையவனிடம் சேர்தல் எல்லா உறுப்புகளும் பிணி தீர்க்கும் மருந்தாகிப் பயன் தரத் தவறாத மருந்து மரம் போன்றது. 28.ஒப்புரவுசெய்தலாகிய கடமையை அறிந்த அறிவுடையவர், செல்வ வளம் சுருங்கிய காலத்திலும் இயன்றவரை உதவத் தவற மாட்டார்கள். - 29. ஒப்புரவாகிய நற்பண்புடையவன் பொருளற்று வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யயியலாது வருந்துகின்ற நிலைமையாகும். 20. பிறர்க்கு உதவி செய்வதால் பொருள் கேடு வரும் என்றால், ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளும் தகுதி உடையதாகும்.