பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 48 அதிகாரம் 24 புகழ் 231, வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழோடு வாழ வேண்டும். அப்புகழன்றி உயிர்க்கு ஊதியம் என்பது வேறொன்றும் இல்லை. 232. புகழ்ந்து பேசுகின்ற்வர் பேச்செல்லாம் வறுமையால் இரப்பவர்கட்கு ஒருபொருள் கொடுத்து உதவுகின்றவரின்மேல் நிற்கின்ற புகழே எப்போதும் நிலையானது. 23. உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழிவில்லாமல் நிலைத்து நிற்க வல்லது வேறொன்றும் இல்லை. 234. நிலவுகின்ற எல்லைவரை நெடுங்காலம் நிற்கவல்ல புகழ்தரும் செயல்களைச் செய்தால் வானுலகமும் தேவர்களைப் போற்றாது. அப்புகழாளனையே விரும்பிப் போற்றும், 235. புகழால் மேன்மை பெறக் கூடிய கேடும் புகழால் நிலை நிற்பதாகிய சர்வும், அறிவிற் சிறந்தோருக்கு அல்லாமல் பிறருக்கு ஒருபோதும் இல்லை. - 236.உலகத்தார் முன்பாக ஒருவன்தோன்றினால் புகழோடுதான் தோன்ற வேண்டும். அத்தகைய சிறப்பு இல்லாதவர் தோன்றுவதை விடத் தோன்றாமல் இருப்பதே நல்லது. 23. தமக்குப் புகழ் உண்டர்குமாறு வாழ இயலாதவர்கள் தம்மைத்தாமே நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வது ஏனோ? 238. தமக்குப் பின்னரும் எஞ்சி நிற்கும் புகழை ஒருவர் பெறாவிட்டால்.அதுவே உலகத்தர் எல்லார்க்கும்பெரிய வசையாகும் என்பார்கள். 239. புகழ் இல்லாதவருடைய உடம்பைத் தாங்கிக் கொண் டிருக்கும் நிலம் கூட வகையற்ற வளமான பயனைத் தருவதில் குறைபாடு அடையும். 240. வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே முறையாக வாழ்கின்றவர் ஆவர். புகழின்றி வாழ்கின்றவரே உயிரோடிருந்தும் உயிர் வாழாதவர் ஆவர்.