பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 50 அதிகாரம் 25 அருளுடைமை 241. அருளாகிய செல்வமே செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வமாகும். பொருள்களாகிய பிறவகைச் செல்வங்கள் எல்லாம் இழிந்தவர்களிடத்திலும் உள்ளன. 242 நல்ல வழியினால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும். பல வழியாக ஆராய்ந்தாலும் அப்படி அருள் செய்தலே உயிருக்கு உறுதுணையாகும். 243. அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்கட்கு ஒருபோதும் இல்லை. 244 நிலைபெற்ற உலகில் உள்ளள உயிர்களைக் காத்து அருள் புரிந்து வாழ்கின்றவர்களுக்குத் தம் உயிரைக் குறித்து அஞ்சுகின்ற தீவினைகள் இல்லை. 245. அருளுடையவர்களாக வாழ்கின்றவர்களுக்கு எவ்விதத் துன்பமும் இல்லை. காற்று இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய உலகில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர். 248. அருள் இல்லாதவராய் அறமற்றவற்றைச் செய்து வாழ் கின்றவர்களை உறுதிப் பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோள்களை மறந்தவர்கள் என்பர். 247. பொருளற்றவர்கட்கு இவ்வுலக வாழ்க்கை இல்லாதவாறு போல,உயிர்களிடத்தில் அருளற்றவர்கட்கு மேலுலகத்துவாழ்க்கை இல்லையாகும். 243. பொருள் இல்லாதவர் ஒருகாலத்தில் பொருள் வளமுடன் பொலிவர் அருள் இல்லாதவரோ வாழ்க்கையின் பயன் அற்ற வர்கள். அவர் எக்காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை. 249. அருளை மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச் செயலை ஆராய்ந்தால், அது தெளிந்த அறிவில்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றதாகும். 250. தன்னைவிட மெலிவானவர்கள்மீது பகைத்துச் செல்லும்போது தன்னைவிட வலியார் முன்பாகத் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைவிற் கொள்ளவேண்டும்.