பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 52 அதிகாரம் 26 புலால் மறுத்தல் 251. தன் தசையைப் பெருகச் செய்வதற்காகத் தான் பிறி தோர் உயிரின்தசையைத் தின்கின்றவன் எப்படி உயிர்கட்கெல்லாம் அருளுடையவனாக இருத்தல் முடியும்? 252. பொருளுடையவராக இருக்கும் தகுதி அப்பொருளைக் காப்பாற்றாதவர்க்கு இல்லை; அருளுடையவராக இருக்கும் தகுதி புலாலை உண்பவர்க்கு இல்லை. 253. ஒன்றன் உடலைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக் கருவியை ஏந்தினவரது நெஞ்சத்தைப்போல் பிற உயிர்க்கு அருள் செய்தலைப்பற்றியே நினையாது. 254 ஓர் உயிரைக் கொல்லாமலிருத்தலே அருள் ஆகும். ஒருயிரைக் கொல்லுதலோ அருளற்ற தன்மையாகும். அதன் உடம்பை உண்ணுதல் அறம் அல்லாதது. - 265 உயிர்களின் நிலைத்த வாழ்வு ஊன் உண்ணாத இயல் பில்தான் உள்ளது; ஊன் உண்டால் அவனை நரகம் வெளிவிடாது. 256 புலாலை உண்ணும்பொருட்டு உயிர்களை உலகினர் கொல்லாதிருந்தால் விலையின் பொருட்டு எவரும் கொலை செய்து ஊனை விற்கமாட்டார்கள். 257, புலால் பிறிதோர் உயிரின் புண் என்று உணர்பவர், அதனைத் தாம் பெற்றபோதும் அதன் இழிநிலை அறிந்து அதனை உண்ணாது ஒழிதல் வேண்டும். 258 பிறிதோர் உயிரின் உடலிலிருந்து பிரிந்து வந்த ஊனைக் குற்றத்திலிருந்து நீங்கிய அறிவையுடையவர் உண்ணமாட்டார். 259. நெய் முதலிய பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் இயற்றுதலைவிட ஒன்றன் உயிரைக் கொன்று அதன் உடலைத் தின்னமிலிருத்தல் மிகவும் நன்மையானதாகும். 260. ஒர் உயிரைக் கொல்லாமலும் புலால் உண்ணாமலும் வாழும் உயர்ந்த பண்பாளனை உலகில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பிப் போற்றும்.