பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 64 அதிகாரம் 32 இன்னா செய்யாமை 1. சிறப்பைத் தருகின்ற பெருஞ்செல்வமே பெறுவதாக இருந்தாலும் பிறர்க்குத் துன்பம் விளைவிக்காதிருத்தலே மனத் துய்மையுடையாரின் கொள்கையாகும். 32 ஒருவன் கறுவு கொண்டு தனக்குத் துன்பம் இழைத்த போதிலும் அவனுக்குத் திரும்பத் துன்பம் ::ாதிருத்த்லே குற்றமற்ற அறிவாளின் கொள்கையாகும். 33. தான் ஏதும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்த வர்க்கும் துன்பமானவற்றைச் செய்தால், அது தப்ப முடியாத துன்பத்தையே கொடுக்கும். 34. தனக்குத் துன்பம் செய்தவரைத் தன்டித்தல் அவர்தம் செயலை நினைத்து நாணும்படியாக அவருக்கு நல்லுதவிசெய்து, அவர் செய்த தீமைய்ையும் தான் செய்த நன்மையையும் மறந்து விடுதலாகும். . 35. பிற உயிருக்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்த துன்பமாகக் கருதி அதனைக்காப்பாற்றாதவிடத்து நாம் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன்தான் உளதோ? 35 பிறர்க்குத் துன்பம் தரும் எனத் தான் உணர்ந்த ஒரு செயலைப் பிறரிட்த்தே செயதல்ை ஒருவன் எப்போதும் செய்யா திருத்தல் தலை சிறந்த அறமாகும். 3?. எவ்வளவு சிறியதாயினும், எந்தக் காலத்திலும் எவரிடத் திலும் மனத்தினால் எண்ணி உண்டாகின்ற துன்பச் செயல்களைச் செய்யாதிருத்தலே சிறப்பாகும். 38. தன் உயிர்க்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன் மற்ற உயிர்கட்குத் துன்பங்களைச் செய்தல் என்ன காரணம் கருதியோ? 39. பிறர்க்குத் துன்பமானவற்றை முற்பகலில் செய்தால், அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாகவே வந்து சேரும். 820, துன்பம் தருவன எல்லாம் துன்பம் செய்தவரின் மேல் சென்று சேர்வன. ஆதலால் துன்பமின்றி வாழ விரும்புவோர் பிறருக்குத் துன்பம் இழைக்க மாட்டார்.