பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 76 அதிகாரம் 38 ജ്ജു 37. பொருள் உண்டாவதற்குக் காரணமான ஊழால் சோர் வில்லாத முயற்சி தோன்றும் பொருள் போவதற்குக் காரணமான ஊழ் வந்தால் சோம்பல் தோன்றும் 372. பொருள் இழத்தற்கான ஊழ் ஒருவனைப்பேதையாக்கும். பொருள் ஆவதற்குக் காரணமான ஊழ் அறிவை விரிவாக்கிப் பெருக்கும். 373 ஒருவன் நுண்மையான நூல்கள் பலவற்றை முயன்று கற்றாலும், ஊழின் நிலைமைக்குத் தகுந்தவாறு உள்ளதாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும். 37. ஊழின் காரணமாக உலகத்தின் இயற்கை இருவேறு வகைப்படும் செல்வராதல் வேறு அறிவு உடையவராதல் வேறு. 35. செல்வம் ஈட்டும் முயற்சிக்கு நல்லுழால் தீயவை நல்லவையாவதும், தீயூழால் நல்லவையும் தீயவையாதலும் உண்டு. 36. வருந்திக் காப்பாற்ற முயன்றாலும் நல்லூழ் வாய்க்காத போது தமக்கு உரியவை அல்லாத பொருள்கள் நில்லாமல் போகும். நல்லூழ் வாய்க்கும்போது தமக்கு உரியவை வெளியே கொண்டுபோய்ச் சொரிந்தாலும் போகா, 37. ஊழை வகுத்தவன் வகுத்துவிட்ட வகைப்படி அல்லாமல் கோடிக்கணக்கான பொருள்களைச் சேர்த்தவர்க்கும் அவற்றைத் துய்த்தல் அரிதாகும். 38.ஊழால்வரும்துன்பங்கள் வந்துவருத்தாமற்போகுமானால், நுகரும் பொருள் இல்லாத வறியவர்கள் தம்முடைய ஆசைகளைத் துறப்பார்கள். 379. நல்வினை விளையும்போது அவற்றை நல்லனவாகக் காண்பவர்கள் தீவினை விளையும் பொது துன்பமுற்றுக் கலங்குவது ஏனோ? 380. ஊழைவிட மிக்க வலிவுள்ளவை வேறு யாவை உள்ளன? ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆய்ந்தாலும் அங்கும் ஊழே முன் வந்து நிற்கும்.