பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவ மாலை பொருக்கு மணிகள் தினையளவு போதாச் சிறுபுன்னிர் நீண்ட பனையளவு காட்டும் படித்தான் - மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார். வெள்ளைக் குறட்பா விரி. (5) - கபிலர் மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மானடியால் ஞால முழுதும் நயந்தளந்தான் - வாலறிவன் வள்ளுவருந் தங்குறள்வெண் பாவடியால் வைத்தார் உள்ளுவவெல் லாமளந்தார் ஒர்ந்து. (6) - - பரணர் தானே முழுதுனர்ந்து தண்டமிழின் ஒண்குறளால் ஆனா அறமுதலா அந்நான்கும் - ஏனோருக்கு ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணின் முகிலுக்கும் வாழிஉலகு என்னாற்று மற்று. (7) - நக்கீரர் அறம்பொருள் இன்பம் வீடு) என்னும்அந் நான்கின் திறந்தெரிந்து செப்பி தேவை - மறந்தேயும் வள்ளுவன் என்பான் பேதை அவன்வாய்ச்சொல் கொள்ளார் அறிவுடை யார். (8) - மாமூலனார்