பக்கம்:திருக்குறள் தெளிவு-7.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 73 — 8. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை யுடைத்து. . (கோ) ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை நோ ம்பரின் கோன்மை உடைத்து, (ப-ாை) ஆற்றின் ஒழுக்கி-(ஒர் இல்லறத்தான் தன் மனேவி, மக்கள். துறவிகள் முதலானேரையும்) நல்ல வழியில் நடக்கச் செய்து, அறன் இழுக்கா-(தானும்) நல்லறத்தில் இருந்து தவருமல் நடத்துகின்ற, இல்வாழ்க்கை-இல்வாழ்க்கை யானது, நோற்பாரின்-தவஞ்செய்வாரைக் காட் டி லு ம், கோன்மை உடைத்து (வலிய) தவத்தன்மை உடையதாகும். (தெ-ாை) ஒழுகுதல் தன்வினை-அஃதாவது தான் நடத் தல். ஒழுக்குதல் பிறவினே-அஃதாவது பிறரை நடக்கச்செய்தல். இங்கே ஒழுக்கி எனப் பிறவினையாகக் கூறியிருத்தலின், மனேவி, மக்கள், துறவிகள் முதலானேரை கல்ல வழியில் கடக்கச் செய்து என்று பொருள் கூறவேண்டியதாயிற்று. இழுக்காத என்பதில் உள்ள த கெட்டது. இதுதான் ஈறு கெட்ட எதிர் மறைப் பெயரெச்சம். இல்வாழ்க்கை கோன்மை உடையது என்ருல், இல்வாழ்வான் கோன்மை உடையவன் என்று கொள்ள வேண்டும். - கோன்மை என்பதற்குத் தவம், வலிமை, பொறை முதலிய பொருள்கள் உண்டு. இங்கே சில உரையாசிரியர் வலிமை எனப் பொருள் உரைத்துள்ளனர். சிலர் பொறை எனப் பொருள் புகன்றுள்ளனர். தவம் எனப் பொருள் உரைத்தாம் யாம். ஏன் ? தவம் என்ருல் எதோ தனிப்பட்டது என்று எவரும் தயங்க வேண்டாம் ; ஒழுங்கான முறையில் இல் வாழ்க்கை கடத்துவதும் ஒரு தவமே. மேலும், இவ்வில்லறத் தவம் துறவிகளின் தவத்தைக் காட்டிலும் வலியதும், சிறந்த தும் ஆகும் என்பது எமது கருத்து. நோற்பாரின் கோன்மை உடைத்து' என்று பாடிய திருவள்ளுவர் கருத்தும் இதுவாகத் தான் இருக்கவேண்டும். இங்கிலைக்குத் தான் இல்லறத்துறவு என்று பெயர். இதனை உடையவர்களே இல்லறத்துறவிகள் என்று இயம்புவது மரபு. இவர்கள் எதையும் முடிப்பார்கள். முன்பு-சங்க காலத்தில் பிசிராங்தையார் என்னும் புலவர் பெருமான் ஒருவர் வாழ்ந்தார். அவர் வயதால் முதிர்ந்தவர்; வடிவத்தால் இளையவர். கரை, திரை, மூப்புக்களுக்கு அவர் உடம்பில் எங்கும் இடம் கிடைக்கவில்லை. ஒரு சமயம் வெளி யூர் ஒன்றுக்குச் சென்ருர் அவர். அவ்வூரினர் சிலர் புலவரை நோக்கி, "பெரியீர்! தங்கட்கு வயது பல கிரம்பியும் கரை தோன்றவில்லையே காரணம் என்ன ? இவ்வாற்றலே