பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 99 43. நல்லறிவு உடைமை அறிவு கேட்டினின்றும் காக்கும் ஒரு வகைக் கருவியாம், அழிக்கும் பகைவராலும் அழிக்க முடியாத உள்காவல் நிலையும் ஆகும் அது. 421 மனம் போகும் போக்கெல்லாம் போக விடாமல், தீமையினின்றும் விலக்கி, நன்மையான வழியில் செலுத்த வல்லதே உண்மை அறிவாகும். 422 எப்பொருளைப் பற்றி யார் யார் வாயிலிருந்து கேள்விப்பட்டாலும், (கேட்டது கொண்டு முடிவு செய்யாமல்) அப்பொருளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து காண்பதே அறிவாகும். - 423 எளிதில் புரியக் கூடியனவாக, கேட்பவர் உள்ளத்தில் நன்கு பதியும்படி தான் கருத்துக்களைப் பேசி, பிறர் வாயிலிருந்து வரும் நுண்ணிய அரிய கருத்துக்களையும் புரிந்து கொள்ள வல்லதே அறிவாகும். 424 உலகினரைத் தழுவிக் கொண்டு ஒத்துப் போவதே உயர் அறிவு: இன்பத்தில் விரிவதும் துன்பத்தில் குவிவதும் இல்லாததே நல்லறிவு. 4.25 உலகம் எவ்வாறு அமைந்து வாழ்கிறதோ, அவ்வாறே உலகத்தோடு அமைந்து வாழ்வது அறிவாம். 426 அறிவாளிகள் எதிரே நடக்கவிருப்பதை முன் கூட்டி அறிவர் அறிவிலிகள் அதனை அறிய மாட்டார்கள். 427 அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாதிருப்பது மடமையாகும்; அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவது அறிஞர்க்கு இயற்கை 428 எதிரே வரவிருக்கும் துன்பத்தை முன்கூட்டி அறிந்து தடுத்துக் காக்கும் அறிவாளிகளுக்கு, அதிர்ச்சி தரும்படி வரக் கூடிய துன்பம் ஒன்றும் இலது. 429 (வேறொன்றும் பெறா விடினும்) அறிவு பெற்றிருப்பவர் எல்லாம் உடையவராகவே மதிக்கப்படுவார்; வேறு என்ன பெற்றிருப்பினும் அறிவு பெறாதவர் ஒன்றும் இல்லாதவராகவே கருதப்படுவார். 4 o' O