பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 103 45. பெரியோரைத் துணைக் கொள்ளுதல் அறங்களை அறிந்து அறிவில் மூத்த பெரியவரின் தொடர்பைத் தேர்ந்தறிந்து, கொள்ளும் வழிமுறையறிந்து கொள்ளுக. 44.1 உள்ள துன்பத்தைப் போக்கி மேலும் துன்பம் வராதவாறு முன்கூட்டிக் காக்கவல்ல பெரியோரின் உறவைப் போற்றிப் பெற்றுக் கொள்க. 4.42 பெரியவரைப் போற்றித் தம் உறவினராகக் கொள்ளுதல் அரிய வாய்ப்புக்களுக்குள் மிக அரியதாகும். 4 4 3 எல்லா நிலைகளிலும் தம்மைவிடப் பெரியவரா யிருப்பவர் தம் உறவினரா யிருக்க வாழ்தல், வலிமைகளுக்குள் எல்லாம் மிக்க வலிமையாகும். 444 (ஆட்சியின் வெற்றிக்கு உரிய வழிகளை) ஆராய்ந்து கூறுபவரையே கண்ணாகக் கொண்டு ஆட்சி நடத்த வேண்டியிருத்தலின், அரசன் அத்தகு சூழ்ச்சி வல்ல பெரியவர்களைச் சுற்றிச் சூழ்ந்து வாழ்வானாக. 445 தகுந்த பெரியோர் குழுவைச் சேர்ந்து ஒழுக வல்லவனைப் பகைவர் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை. 4.46 இடித்து அறிவுரை கூறித் துணை செய்யும் பெரியவரைப் பெற்றிருப்பவரைக் கெடுக்கும் தகுதி யுடையவர் யார் உளர்? 447 குற்றம் கண்டவழி இடித்துப் பேசும் பெரியவரைப் பெற்றில்லாத காப்பற்ற அரசன், கெடுக்கும் பகைவர் இல்லாமலேயே தானே கெடுவான். 4 48 முதலீடு இல்லாத வணிகர்க்கு ஊதியம் (இலாபம்) இல்லை; அதுபோல, தூண்போல் தாங்கும் துணை யில்லாதவர்க்கு நிலைத்த வாழ்வு இல்லை. 449 நல்ல பெரியவரின் உறவை இழத்தல், பொல்லாத பலருடைய பகையைப் பெறுவதினும் பத்து மடங்கு தீங்குடைத்ததாகும் 450