பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 111 49. தக்க காலம் அறிந்து நடத்தல் தன்னினும் வலிய கோட்டானைப் பகலிலே காக்கை வென்று விடும்; எனவே, பகைவரை வெல்ல விரும்பும் மன்னருக்கு அதற்கு ஏற்ற காலம் வரவேண்டும். 481 காலத்தோடு பொருந்த நடத்தல், செல்வத்தை நீங்காதபடி கட்டி வைக்கும் ஒரு கயிறாகும். 482 தகுந்த துணைக் கருவியுடன் உரிய காலத்தையும் அறிந்து செயலாற்றின், செய்தற்கரிய செயல்கள் என்பனவும் உண்டா? 483 தக்க காலத்தை அறிந்து இடத்திற்கு ஏற்பவும் செயல்புரியின், உலகத்தையே பெற விரும்பினாலும் கைகூடும். 484 உலகத்தைத் தம் கைக்குக் கொண்டுவர விரும்புபவர் எனப்படுபவர், சிறிதும் கலங்காமல் அதற்குரிய நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பர். - *- 485 மிக்க ஊக்கமுடையவன் உரிய காலம் வரும்வரை ஒடுங்கியிருப்பது, போர் செய்யும் ஆட்டுக்கடா எதிரி ஆட்டைத் தாக்குவதற்காக அடியைப் பின் வாங்குவது போன்றதாம். 486 அறிவாளிகள், ஒருவர் தொல்லை தரின் வெடுக்கென்று வெளியே சினங்காட்ட மாட்டார்கள் உரிய காலம் நோக்கி உள்ளே சினங் கொண்டிருப்பர். 487 பகைவரைப் பார்த்தால் பொறுத்திருக்க அவரை அழித்தற்கேற்ற காலத்தைக் கண்டுபிடித்து விட்டால் அவர்தலை கீழே சாயும். 4, 88 கிடைத்தற்கரிய காலம் வாய்த்தால், அப்போதே செயற்கரிய செயல்களைச் செய்து விடுக. 489 சோர்வான காலத்தில், இரை எதிர்பார்க்கும் கொக்குப் போல் அமைதியாய் இருப்பீராக; சிறந்த நேரம் வந்துற்ற போது, அக் கொக்கின் குத்தைப் போல் குறி முடிப்பீராக. 4.9 O