பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பொருள் 60. ஊக்கம் உடைமை உடைய ரெனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று. 591 உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். . 592 ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார். - 593 ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை. 594 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. 595 உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து. 596 சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றும் களிறு, 597 உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு. 598 பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். - 599 உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார் மரம்மக்க ளாதலே வேறு. 6OO