பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சியல் 143 65. பேச்சுத் திறமை நாக்கு நயம் என்கின்ற நன்மை ஒருவகை உடைமையாகும். அந்த நாக்கு நலம், மற்ற நலங்களுள் ஒன்றாய் அடங்காமல் யாவற்றினும் சிறந்ததாம். 64 1. பேச்சைக் கொண்டு வளர்ச்சியும் அழிவும் ஏற்படுவது உண்டாதலால், பேச்சில் சோர்வு ஏற்படாதபடிப் பார்த்துக் காத்துக் கொள்ள வேண்டும். 6.42 கேட்டவரைக் கட்டிக் கவரும் தகுதி பெற்று, கேட்காதவரும் விரும்பிக் கேட்கும்படி சொல்லுவதே சிறந்த சொல்லாகும். 643 சொற்களைப் பேசும் முறையறிந்து பேசுக அங்ங்ணம் பேசுவதை விடச் சிறந்த அறமும் பொருளும் வேறில்லை. 644 வேறொருவரது சொல் தன் சொல்லை வெல்லக் கூடிய சொல்லாக இல்லாதபடிப் பார்த்துச் சொல்லைச் சொல்லு Θ) ΙΠΤULjΠ85. - 6 4.5 பிறர் விரும்பிக் கேட்கும்படி தாம் பேசி, அவர் சொல்வதில் உள்ள நன்மையைத் தாம் எடுத்துக் கொள்வதே குற்றமற்ற மாண்பு உடையவரது கொள்கை. 646 சொல்வன்மை உடையவனாயும் சோர்வு இல்லாதவனாயும் அஞ்சாதவனாயும் உள்ள ஒருவனைப் பகைகொண்டு வெல்லுதல் எவர்க்கும் இயலாது. 647 நேர்ந்து நிரவி இனிமையாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால், அவர் இடும் வேலையை உலகம் விரைந்து கேட்டுச் செய்யும். - 648 குற்றம் இல்லாதவையாய்ச்சில சொற்களையும் சொல்லத் தெரியாத சிலர், பல சொற்கள் பேச மிகவும் விரும்பு கின்றனர். 649 கற்ற கருத்துக்களைப் பிறர் தெளியும்படி விரித்து விளக்கத் தெரியாதவர்கள், கொத்தாக மலர்ந்தும் மணம் வீசாத மலர்களைப் போன்றவர் ஆவர். 65 O