பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சியல் 145 66. செயல் ஒழுங்கு கிடைத்த துணையின் நன்மை ஆக்கம் அளிக்கும் செயல் நன்மையோ விரும்பிய யாவும் ஈயும். 651 புகழும் நன்மையும் கொடுக்காத செயல்களை எப்போதும் செய்யாது நீக்க வேண்டும். 652 ‘யாம் வளர்ச்சி பெறுவோம்' என்று கருதியிருப்பவர், புகழ் மங்கும் செயல்களை விலக்க வேண்டும். 653 கலங்காத நல்லறிவினர், தாம் துன்பத்துள் அகப்படினும், அத்துன்பம் போக்குவதற்காக இழிசெயல்களைச் செய்ய LDfTL–LITĪTS5ØTT. - 654 'என்ன செய்துவிட்டேன்' என்று பின்பு வருந்தும் படியான செயல்களைச் செய்யலாகாது; தவறிச் செய்து விட்டால், மறுபடியாயினும் அத்தகைய செயல்களைச் செய்யாதிருப்பது நல்லது. 655 பெற்ற அன்னையின் பசியைக் கண்டு கலங்கினான் ஆனாலும், அப்பசி போக்குவதற்காகப் பெரியோர் பழிக்கும் தீய செயல்களைச் செய்ய வேண்டா. 656 பழிச் செயல் புரிந்து அடைந்த செல்வத்தை விட, அது செய்யாத பெரியோர்களின் மிக்க வறுமையே மேலானது. - 657 செய்யக் கூடாதெனச் சான்றோர் கடிந்த செயல்களைத் தாமும் கடிந்து விலக்காமல் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் பின்பு துன்பமே விளைவிக்கும். 658 பிறர் அழும்படி வருத்திப் பெற்ற பொருள் எல்லாம் பின்தான் அழும்படி வந்தவழியே திரும்பி விடும்; நல்வழியில் வந்த பொருள்களை முதலில் இழந்தாலும் பின் நன்மை விளைக்கும். 659 வஞ்சகச் செயலால் பொருள் ஈட்டிக் காத்தல் என்பது, சுடாத பச்சை மண்பாண்டத்துள் நீரை ஊற்றி அதை அதிலேயே இருத்த முயல்வது போன்றது. 66 O