பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சியல் 147 67. செயலில் உறுதி செயலில் உறுதி எனப்படுவது ஒருவனது உள்ளத்தின் உறுதியே மற்ற உறுதிகள் எல்லாம் அப்பாற் பட்டனவே. 661 ஆராய்ந்தறியும் அமைச்சரது கோட்பாடு, துன்பம் வராமல் முன் கூட்டித் தடுத்தல், தவறி வந்துவிட்டால் கலங்காமை ஆகிய இரண்டு வழிகளைப் பின்பற்றியிருக்கும் GT6WILJ[T. 662 செய்யும் அருஞ் செயலை, இறுதியில் எல்லோருக்கும் தெரியும்படி மறைவாகச் செய்து வருவதே ஆண்மை; நடுவிலே தெரியின் நீங்காத் துயர்விளைக்கும். 663 இப்படிச் செய்யலாம் - அப்படிச் செய்யலாம் என வாயால் சொல்லுதல் எல்லோர்க்கும் எளிது; சொல்லியபடிச் செய்தலோ அரிது. 66.4 பெருமிதம் உற்றுச் சிறந்த அமைச்சரின் செயல் உறுதி, அரசனது பார்வையில் உறப் பெற்று உயர்வாகக் கருதப்படும். * 665 செய்ய எண்ணியவர் உறுதியுன்டயவராய் அமையப் பெற்றால், எண்ணியவற்றை எண்ணியபடியே கட்டாயம் அடைவார். - 666 உருண்டோடும் பெரிய தேருக்கு அச்சில் உள்ள ஆணியைப் போல் திண்மையானவரை உடையது இவ்வுலகம்; எனவே எவரையும் உருவத்தின் எளிமை நோக்கி இகழலாகாது. 667 கலங்காமல் முடிவு கண்ட செயலைச் செய்யும்போது, சோராமல் தூக்கத்தையும் நீக்கி உறுதியுடன் செய்க. 668 இன்பம் தரும் செயலை, நடுவிலே துன்பம் மிக வந்தாலும் துணிச்சல் கொண்டு செய்க. 669 எப்பேர்ப்பட்டவேறு உறுதிகள் உடையவராயிருப்பினும், செயலில் உறுதியை விரும்பாதவரை உலகம் விரும்பாது. 670