பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பொருள் 73. அவை அஞ்சாமை வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். 721 கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். 722 பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர். 723 கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். 724 ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு. 725 வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு. 726 பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல். 727 பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார். 728 கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லார் அவையஞ்சு வார். 729 உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். 73O