பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படையியல் 169 78. படையின் வீரமிடுக்கு பகைவர்காள் என் தலைவன் முன்னே நிற்கவுஞ் செய்யாதீர்கள் என் தலைவன் முன் எதிர்த்து நின்று இறந்து நடுகல்லாய் நின்றவர் பலர். 771 காட்டு முயலை எய்து வீழ்த்திய அம்பை விட, பெரிய யானைமேல் எறிந்து குறி தவறிப் போன வேலைத் தாங்குதல் இன்பமானது. 77շ பகைவரை நொறுக்கும் வீரம் உடைமையே பெரிய ஆண்மை என்பர் பெரியோர் அப்பகைவர்க்கு ஒரு துன்பம் நேரின் அவர்க்கும் உதவி செய்தல் அந்த ஆண்மைக்குக் கூர்மையாகும். 773 தன் கையில் இருந்த வேலை எதிரியின் யானை மேல் எறிந்து விரட்டி வேறு வேல் நாடிவரும் வீரன் ஒருவன், எதிரியால் எறியப்பட்டுத் தன் உடம்பில் தைத்துள்ள வேலை இழுத்தெடுத்துச் சிரிக்கிறான். 774 ழித்து நோக்கிய தம் கண்களை, பகைவர் வேல் கொண்டு எறிந்தபோது, மூடித் திறந்தால், அது மறவர்க்குப் புறமுதுகிட்டு ஒடிய தோல்வியாகும். 775 மறவன் தான் வாழ்ந்த நாட்களைக் கணக்கிட்டு, வெற்றிப் புண்படாத நாட்களைத் தான் வாழாது கழித்த நாட்கணக்கில் சேர்ப்பான். 776 எங்கும் பரவும் புகழை விரும்பி உயிரை விரும்பாத மறவர், தம் காலில் வீரக்கழ்ல் கிட்டுவது அழகான தோற்றம் உடையதாம். 777 ஊறு நேரின் உயிர்க்கு அஞ்சாத வீரர், அரசன் கடிந்து தடுக்கினும் வீரச் சிறப்பு குறைதல் இலர். 778 தாம் கூறிய சூளுரை தவறாதபடி போரிட்டுச் சாகக் கூடிய மறவரை, அவர் தவறி விட்டார் என்று தண்டிக்கத்தக்கவர் எவர் உளர்? 779 தம்மைக் காத்த அரசரது கண்களிலே நீர் பெருகும்படி பொருது சாவதானால், அப்படி ஒரு சாவு இரந்தாயினும் பெற்றுக் கொள்ளத்தக்கதாகும். 780