பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பொருள் 83. கூடா நட்பு சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. - 821 இனம்போன்ற இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். 822 பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லார் ஆகுதல் மாணார்க்கு அரிது. - 823 முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும். 824 மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று. 825 நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். 826 சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். 827 தொழுதகை யுள்ளும் படையெடுங்கும் ஒன்னார் அழுதகண் ணிரும் அனைத்து. 828 மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று. 829 பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு - அகநட்பு ஒரீஇ விடல் 83O