பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்பியல் 197 92. மணவாத விலைமகளிரின் கீழ்மை ஒருவனை அன்போடு விரும்பாமல் பொருளுக்காக விரும்புகிற அழகிய வளையல் அணிந்த விலை மகளிர் பேசும் இனிய சொல் துன்பம் தரும். 911 வரும் பயனை ஆய்ந்தறிந்து பண்புடையார்போல் பேசும் பண்பற்ற பொது மகளிரின் பசப்பை ஆராய்ந்தறிந்து அவருடன் கூடா 912 பொருள் பெறும் விலைமகளிரின் பொய்யான புணர்ச்சி, இருட்டு அறையில் அயலான பிணத்தைத் தழுவியது போன்றதாம். 913 அருட் செல்வத்தை ஆராயும் நல்லறிவினர், பொருளையே பொருட்படுத்தும் பொதுமகளிரின் இழிந்த இன்பத்தில் ஈடுபடார். 914 நலமான இயற்கை அறிவுடன் சிறந்த கல்வியறிவும் உடையவர், பொருள் கொடுப்போர்க்கெல்லாம் பொதுவாக இன்பம் அளிக்கும் விலைமகளிரின் தாழ்ந்த இன்பத்தைப் பொருந்தார். 915 அழகு முதலிய தகுதிகளால் 黜 தம் புல்லிய உடலின்பத்தை விற்கும் பெண்களின் தோளைத் தமது நற்கடமையைப் புரியும் நல்லோர் கூடார். 9 16 நெஞ்சிலே வேறு விருப்பங் கொண்டு புணரும் பொது மகளிரின் தோளை, உறுதியான உள்ளம் இல்லாதவரே தழுவுவர். 917 வஞ்சக விலை மாதரின் புணர்ச்சி, ஆராயும் நல்லறிவினர் அல்லாதார்க்குத் தீண்டி வருத்தும் (மோகினித்) தெய்வத் தாக்குதலாம் என்பர். 918 இன்னார் என்ற வரையறை இல்லாத அழகிய அணிகலன் அணிந்த விலைமாதரின் மெல்லிய தோள், அறிவற்ற கீழ்மக்கள் அழுந்திப் புதையும் நரகமாம். 919 இருவேறுபட்ட உள்ளமுடைய விலைமகளிரும் கள்ளும் சூதும் ஆகிய் முப்பொருளும் திருமகளால் விடப்பட்டவரின் உறவாகும். 92O