பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்பியல் 199 93. கள் குடியாமை கள்ளின்மேல் விருப்பங் கொண்டு குடிப்பவர், என்றுமே பகைவரால் அஞ்சப்படார். புகழும் இழப்பர். 92.1 கள் அருந்தலாகாது அருந்துவதானால், பெரியோரால் நன்கு மதிக்கப்படுவதை விரும்பாதவர் வேண்டுமானால் அருந்துக. 922 கள் மயக்கம், பெற்ற அன்னை முகத்திலும் வெறுப்பு அளிக்கும் எனில், மற்றபடி காணும் பெரியோர் முகத்தில் எவ்வளவு வெறுப்பு உண்டாக்குமோ? 923 நாணம் என்னும் நல்ல பெண், கள் குடித்தல் என்னும் பொருந்தாத பெருங் குற்றம் புரிபவர்க்கு முன் நில்லாமல் புறங்காட்டிச் சென்று விடுவாள். 924 பொருளைச் செலவிட்டுக் கள் குடித்து மெய்ம்மறந்த மயக்க நிலையை அடைதல், ஒழுங்குமுறை அறியாத மடமையுடைய செயலாம். 9.25 ஒன்றும் உணராமையின் தூங்குபவர் இறந்தவரினும் வேறாகார்; அதுபோல, நிலை மயங்குதலின், கள் குடிப்பவர் நஞ்சு அருந்தியவர்க்கு நிகர். 92.6 கள்ளை மறைவாகக் குடித்துக் கண் மயங்கிக் கிடப்பவர், உள்ளுரிலே தம் உள் செய்திகள் அறியப்பட்டு என்றும் எள்ளி நகையாடப்படுவர். 927 கட்குடியன் ஒருவன் 'யான் கள் குடித்தறியேன்" என்று பொய் சொல்வதை, விடுவானாக; ஏனெனில், அவன் கள்ளுண்ட அப்போதே, நெஞ்சில் ஒளித்துள்ள செய்திகள் யாவும் வெளிப்பட்டு விடும். 9.28 கள்ளுண்டு மயங்கினவனுக்குப் பல காரணங்கள் காட்டி அறிவு புகட்டுதல், நீரின் அடியில் மூழ்கியவனை எரியும் விளக்கால் துருவித் தேடல் போன்றது. 92.9 ஒருவன் தான் கள் உண்ணாதபோது, கள்ளுண்டு மயங்கிக் கிடக்கும் மற்றொருவனைக் கண்டால், கள் உண்பதால் வரும் சோர்வை எண்ணிப் பாரானோ 930