பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்பியல் 201 94. சூது ஆடாமை வெல்வதானாலும் சூதாடுதலை விரும்ப வேண்டா. வெற்றிபெறுதலும் (எதுபோன்ற தெனில்), இரை உள்ள துண்டில் இரும்பை மீன்விழுங்கியது போன்றதாம். 931 ஒரு பொருளைப் பெறுவதுபோல் பெற்றுநூறு பொருளை இழந்துபோகும் சூதாடிகளுக்கும். நன்மை பெற்று வாழத்தக்க வழி யொன்று உண்டோ? 9 32 காய் உருட்டி வைக்கும் பந்தயப் பொருளை ஓயாது கூறிச் சூதாடினால், பொருள் வருவாய் ஆடுபவனை விட்டு நீங்கி வேறிடம் சாரும். 933 இழிவுகள் பல தந்து புகழையும் அழிக்கிற சூதை விட வறுமை தரக் கூடியது வேறொன்றும் இல்லை. 93.4 சூதாடு கருவியும் சூதாடும் இடமும் சூதாடும் கையுமாக ஊக்கம் மிக்குற்று உழலுபவர், எவ்வளவு இருப்பினும் ஒன்றும் இல்லாதவ ராகி விடுவர். 935 சூது என்னும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறுநிரம்ப உண்ணாராய்த் துன்பத்தால் வருந்துவர். 936 காலையில் எழுந்ததுமே சூதாடு களத்துள் நுழைந்து விட்டால், அது நெடுநாள் இருந்துவந்த செல்வத்தையும் நற்பண்பையும் அழித்து விடும். 937 சூது செல்வத்தைச் சிதைத்து, பொய்யைப் புனைந்துரைக்கப் பண்ணி, அருளை அழித்துத் துன்புற்று வருந்தப்பண்ணும். 938 ஒருவன் சூதைக் கைக்கொண்டால், உடை, செல்வம், உணவு, புகழ், கல்வி என்னும் ஐந்தும் அவனை அடையாது நீங்கும். 93.9 பொருளை இழக்க இழக்க மேலும் ஆட விரும்பும் சூதைப் போல, துன்பத்தால் வருந்த வருந்தவும் மேலும் வாழ விரும்புகிறது உயிர். 940