பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பொருள் 95. மருந்து மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. 941 மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். 942 அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு. 943 அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து. 944 மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு. 945 இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபே ரிரையான்கண் நோய். 946 தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும். 947 நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். 948 உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல். 949 உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து. 95O