பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்பியல் 203 95. மருத்துவம் வாதம், பித்தம், ஐ (சிலேத்துமம்) என மருத்துவ நூலறிஞர் வகுத்துள்ள மூன்றும், உடலில் அளவுக்கு மீறினாலும் குறைந்தாலும் நோய் விளைக்கும். 941 முன் உண்டது செரித்து விட்டதா என நன்கறிந்து பிறகு உண்டால், உடம்புக்கு மருந்து என ஒரு பொருள் வேண்டியதில்லை. . 94.2 முன் உண்டது செரித்து விட்டால், மேலும் செரிக்கும் அளவு அறிந்து அளவோடு உண்ண வேண்டும். அதுதான், உடம்பு பெற்ற ஒருவன் அதனை நெடுங்காலம் செலுத்திக் காக்கும் வழியாகும். 94 3 முன் உண்டது செரித்ததை அறிந்து, மேலும் செரிக்கும் வழியைப் பின்பற்றி, மாறுபாடற்ற பொருத்தமான உணவை மிகவும் பசித்தபின் உண்ணுக. 94 4 மாறுபாடற்ற பொருத்தமான உணவை நிரம்ப உண்ணாமல் போதும் போதும் என மறுத்து அளவோடு உண்டால் உயிர்க்குத் துன்பம் இல்லை. 9.45 குறைந்த அளவு அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைத்து நிற்பது போல், மிகப் பெரிய தீனியை விழுங்குபவனிடம் பிணி நிலைத்து நிற்கும். 946 ஒருவன் பசித் தீயின் அளவுக்கு ஏற்ப அல்லாமல் நன்மை தீமை ஆராயாதவனாய் மிகுதியாய் உண்டால் பிணிகள் அளவில்லாமல் தோன்றும். 94.7 நோய் இன்னதென அறிந்து, நோயின் காரணத்தை ஆய்ந்து, அது தீர்க்கும் வழியையும் தெரிந்து, தவறாது நலம் வாய்க்கும்படி மருத்துவம் செய்க. 9.48 மருத்துவம் கற்றவன், நோயுற்றவனின் நிலையையும் பிணியின் அளவையும் காலத்தின் இயல்பையும் எண்ணி ஆராய்ந்து செயல் புரிக. 949 பிணி உற்றவன், பிணி தீர்க்கும் ಶ್ದಿ மருந்து, அருகிருந்து அனைத்தும் செய்பவன் ஆகிய அந்நால்வகைத் திறத்தையும் பொறுத்தது மருத்துவம். 95O