பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியியல் 211 99. நிறை இயல்பு (சால்பு) உடைமை கடமையறிந்து சால்புடைமை ற்ேகொண்டு ஒழுகுப வர்க்கு, நன்மைகள் எல்லாம் வந்து சேரக் கடமைப் பட்டுள்ளன என்பர் அறிஞர். 981 சான்றோர்க்கு நலம் என்பது சிறந்த குணநலமே இக்குண நலம் தவிர வேறு நலங்களுள் எந்த நலத்திலும் சான்றோரின் நலம் அடங்கியிருக்கவில்லை. 982 அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐந்தும் சால்பு (சான்றாண்மை) என்னும் கட்டடத்தைத் தாங்கும் தூண்களாகும். 983 நோன்பு என்பது, எவ்வுயிரையும், கொல்லாத சிறப்பு உடையது; சால்பு என்பது, பிறர் தீமையை எடுத்துச் சொல்லாத சிறப்பு உடையது. 98.4 வல்லவர்க்கு வலிமை எனப்படுவது பணிவுதான்; அப்பணிவு, சான்றோர் தம் பகைவரைத் திருத்த உதவும் ஒருவகைப் படைக்கலமாகும். 985 சால்புடைமையை அறிவதற்கு உரைகல் எது எனில், தனக்கு நிகர் அல்லாதவரிடத்திலும் தோல்வியை ஒத்துக் கொள்ளும் அடக்கம்தான். 986 சான்றோர் தமக்குத் துன்பம் செய்தவர்க்கும் இன்பம் செய்யாவிட்டால், அவரது சால்பு என்ன நன்மை அளிக்குமோ? 98.7 சால்புடைமை என்னும் வலிமை இருக்கப் பெற்றால், ஒருவனுக்கு ஏழ்மை இழிவாகாது. 988 சால்புடைமைக்குக் கடல் போன்றவர் என்று புகழப்படுபவர், ஊழி மாறி உலகமே அழியினும், தாம் சால்புடைமையிலிருந்து மாறமாட்டார். 989 சான்றோர் தம் சால்புடைமையிலிருந்து தாழ்ந்தால், இப்பெரிய உலகம் தன் சுமையைத் தாங்க முடியாமல் ஐயோ அழிந்து போகும். 99 O