பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியியல் 227 107. இரத்தலுக்கு அஞ்சுதல் மறைக்காது மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடமும் ஒன்று இரந்து கேட்காமல் இருப்பது கோடி மடங்கு சிறந்தது. 1061 உலகில் ஒரு சிலர் இரந்துதான் உயிர் வாழ வேண்டும் என்றால், அப்படி ஒர் உலகத்தைப் படைத்த கடவுள் இரப்பவர் போலவே அலைந்து கெடுக. 1062 ஏழ்மைத் துயரை இரந்து பிழைத்துத் தீர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிற கொடுமையைப் போல் கொடியது வேறு இல்லை. 1 O 63 வேறு வழியில்லாதபோதும் இரத்தலைச் செய்யாத பெருந்தன்மை, உலகத்தின் இடமெல்லாம் கொள்ள முடியாத அவ்வளவு சிறப்புடையதாம். 1064 தெள்ளிய நீர்போல் ஆக்கிய எளிய கூழுணவு ஆயினும் தம் சொந்த உழைப்பால் வந்ததை உண்ணுவதனினும் இன்பமானது வேறில்லை. 1 O65 பசுவிற்குத் தண்ணீர் வேண்டுமெனக் கேட்பினும் நாக்கிற்கு அப்படி கேட்பதைவிட இழிவானது வேறில்லை. 1066 இரந்து கேட்ப தென்றால், ஈயாது மறைப்பவரிடம் இரவாதீர்கள் என்று, இரப்பவரை யெல்லாம் யான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். 1 O67 (வறுமைக் கடலைக் கடக்க மேற்கொண்ட) இரத்தல் என்கிற காப்பு அற்ற ஒடம், ஈயாது மறைத்தல் என்னும் பாறை தாக்கப் பிளவு படும். 1 O 68 இரத்தலின் இழிவை எண்ணினால் உள்ளம் உருகும்; ஈயாது மறைத்தலை எண்ணினாலோ, இருந்த உள்ளமும் இல்லாமல் அழிந்து விடம். 1 O 69 இரப்பவர் கொடு என்று சொல்லிக் கேட்பதற்கே நாணத்தால் உயிர் போகிறது; இல்லையென்று மறைப்பவர்க்கு மட்டும் உயிர் போகாமல் உடம்பிற்குள் எங்கே ஒளிந்திருக்கிறதோ? 1 O7 O