பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் 245 115. ஊரார் அலர் (பழி) தூற்றுவதை அறிவுறுத்துதல் எம் காதல் பற்றி ஊரார் அலர் தூற்றுவதால் (அவளை வேறு யாரும் மணக்க வரமாட்டாராதலின்) அரிய உயிர் நிலைத்துள்ளது. எம் நற்பேற்றால் அந்த அலரை இன்னும் பலர் அறியமாட்டார்கள். 1141 பூப்போலும் கண்ணுடைய அவளது அருமை அறியா மல் இந்த ஊரார் எமக்கு அலர் உண்டாக்கினர். 1142 ஊர் அறிய அலர் தோன்றாதிருக்குமா? அந்த அலரை அடைவதற்கு முன்பே அடைந்து விட்டது போன்ற நிலைமை இருந்தது. - 11 4 3 ஊரார் தூற்றும் அலரால் எம் காமம் மேலும் வளர்கிறது; அது இல்லையானால், தன் இயல்பு கெட்டுத் 'தவ்' எனச் சுருங்கி விடும். . 1144 காமம் அலரால் வெளிப்படுந்தோறும் இனிக்கிறது, அது, கட்குடியர்கள் உண்டுகளிக்குந் தோறும் அக் கள் உண்ணலை விரும்புவது போன்றதாம். 1145 காதலரைக் கண்டது ஒருநாள்தான் நிகழ்ந்தது; அலரோ திங்களைப் பாம்பு (சந்திர கிரகணம்) பிடித்தது போல ஊர் அறியப் பரவி நிலைத்தது. 1. 146 இந்தக் காம நோய் ஊரார் தூற்றும் அலரை எருவாகவும் எம் அன்னை வைகிற கொடுஞ் சொல்லைத் தண்ணீராகவும் கொண்டு நீண்டு வளர்கிறது. 1. 147 அலர் எழுந்ததால் காமத்தீயை அணைப்போம் என முயலுதல், நெய்யால் நெருப்பை அணைப்போம் என முயலுதல் போன்றதாம். 11. 48 'அஞ்சாதே' என்று அன்று சொன்ன காதலர் இன்று நம் குடியினர் பலரும் நாணும்படி பிரிந்து சென்றுள்ளபோது, அலருக்கு நாண முடிகிறதா? 11 49 யாம் எதிர்பார்த்த அலரை இவ்வூரார் எடுத்து மொழிகின்றனர்; எனவே, காதலர் தாம் மணக்க விரும்பினால் அவ்வாறே செய்வார். 1 150