பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 257 121. முன் நிகழ்ந்ததை நினைத்துப் புலம்புதல் காதலரை நினைத்த அளவிலே நீங்காத பெரு மகிழ்ச்சியைக் காமம் தருவதால், குடித்தால் மட்டும் இனிமை தரும் கள்ளை விட அக்காமம் இனியது 1201. தாம் விரும்பும் காதலரை நினைத்தாலே ஒரு துன்பமும் வராமற் போய்விடுகிறது. எனவே, எவ்வகையிலும் காமம் இனிய ஒரு பொருளே அறிக! 1202 எனக்குத்தும்மல் தோன்றுவதுபோல் காட்டித் தோன்றாது அடங்குகிறது; அவர் என்னை நினைப்பது போல் காட்டி நின்ையாது விடுகிறாரோ? 12O3 எம் நெஞ்சத்தில் ஒ! ஒ! அவர் இருக்கின்றாரே, அதேபோல அவர் நெஞ்சிலும் யாமும் இருக்கிறோமோ, இல்லையோ 1204 நமது நெஞ்சிலே யாம் புகாதபடி காவல்காத்து எம்மைத் தடுக்கிற காதலர், எமது நெஞ்சில் மட்டும் ஓயாது தாம் வருவதற்காக நாணாரோ? 12 O 5 அவரோடு யான் வாழ்ந்த நாளை நினைக்கிற இன்பத்தினால்தான் இன்னும் உயிரோடுள்ளேன்; வேறு எதனால் யான் உயிரோ டிருக்க முடியும்? ஐயோ! 1206 காதலரோடு பெற்ற இன்பத்தை மறவாமல் நினைத்துங் கூட பிரிவு நெஞ்சைச் சுடுகிறது; மறந்து விடின் என்ன ஆவேனோ? அந்தோ 12O7 காதலரை யான் எப்படியெல்லாம் நினைத்தாலும் என்மேல் சினவார்; அவர் எனக்கு அளிக்கும் பெருமை அத்தகைய தல்லவா? 1208 நாம் இருவரும் ஒருவரே யன்றி வேறு ஆகோம் என்று தேற்றிய காதலரின் இரக்கம் இன்மையை மிக மிக நினைந்து என் இனிய உயிர் சாகிறது. 1209 நிலவே பிரிந்து சென்ற தலைவரை விடாமல் தேடி நான் கண்ணால் காணும் வரை நீ மறையாதே வாழ்க நீ 1210