பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 261 123. மாலைப் பொழுது கண்டு வருந்துதல் ஏ பொழுதே மாலையா நீ? அல்லை; மணந்து பிரிந்த காதலர்களின் உயிரை உண்ணும் ஊழிக் கடல் 獻 நீயாவது வாழ்க! - 1221 மருண்ட மாலைப் பொழுதே நீ ஒளியிழந்துள்ளாய் உன் துணைவரும் எம் துணைவரைப் போல் ஒரு கொடியவரோ? வாழ்க நீ! 1222 பனி பெய்வதால் பசப்புக் கொண்ட மாலையானது, எனக்கு வாழ்வில் வெறுப்புத் தோன்றித் துன்பம் மிகும்படி வருகிறது. 1223 என் காதலர் இல்லாதபோது, மாலையானது, கொலைக் களத்தில் கொல்லுகிற அயலாரைப் போல் தோன்றி வருகிறது. 1224 (விடியா பொழுதை விடியச் செய்து உதவிய) காலை நேரத்திற்கு மட்டும் யான் என்ன நன்மை செய்தேன்? வருத்துகின்ற இம் மாலை நேரத்திற்கு மட்டும் என்ன பகை செய்து விட்டேன். 1225 பிரிந்தால் மாலைப் Uట్ట நோய் செய்யும் என்னும் உண்மையை, காதலர் ரியாதிருந்தபோது யான் அறிந்திலேன். 1226 ந்தக் காம நோய், காலையில் அரும்பு விட்டு, பகல் முழுவதும் பெரிய மொட்டாய் இருந்து, மாலை நேரத்தில் மலர்கிறது. 1227 கொல்லும் கொலைக் கருவி, நெருப்புப் போன்ற இம் மாலை நேரத்திற்குத் துதாக வந்து, ஆயனது புல்லாங்குழல் உருவத்தில் இருக்கும் போலும்! 1228 மதி மயங்கும்படி மாலை நேரம் வரும்போது, (என் துன்ப நிலையைக் கண்டு) இந்த ஊரே துன்புற்று வருந்தும். 1229 இவ்வளவு காலம் சாகாதிருந்த என் உயிர் பொருளே குறியாகப் பிரிந்து சென்ற காதலரை எண்ணி இந்த மருண்ட மாலை நேரத்தில் சாகிறது. 1230