பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 இன்பம் 124. உறுப்புநலன் அழிதல் சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண். 1231 நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பணிவாரும் கண். 1232. தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள். 1233 பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள். 1234 கொடியர் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள். 1235 தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து. 1236 பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோள் பூசல் உரைத்து. 1237 முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது . பைந்தொடிப் பேதை நுதல். - 1238. முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண். 1239 கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு. 124O