பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 263 ٢ـجي ټت٦ 124. உறுப்புக்களின் அழகு கெடுதல் இழி நிலையை நமக்கு விட்டுத் தொலைவில் பிரிந்து போன காதலரை எண்ணி அழுததால் கண்கள் பொலிவு இழந்து மணம் மிக்க மலர்களுக்குத் தோற்று நாணம் கொண்டன. 1231 பசப்புற்று நீர் சொரியும் கண்கள், விரும்பிய காதலர் அருள் புரியாது பிரிந்தமையைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லுவனபோல் உள்ளன. 1232 காதலருடன் கூடியிருந்த நாளில் பூரித்திருந்த தோள்கள், இப்போது அவர் பிரிந்தமையை மிகவும் அறிவிப்பன போல் மெலிந்து விட்டன. 1233 துணைவர் நீங்கியதால் பழைய அழகும் கெட்டு வதங்கிய தோள்கள், பருமை குறைந்து, பசுமையான கடகமும் சோர்ந்து விழும்படி மெலிந்தன. 1234 கடகம் கழன்றதுடன் பழைய பொலிவும் அற்ற தோள்கள், கொடிய காதலரின் பிரிவுக் கொடுமையைப் பிறர்க்கு எடுத்துரைக்கும். 1235 தோள்கள் கடகம் கழலும்படி மெலிந்ததால், காதலர் கொடியவர் என அத்தோள்கள் அறிவிப்பதற்கு மனம் புண்பட்டு வருந்துகிறேன். 1236 நெஞ்சே வாடிய என் தோட்களின் ஆர்ப்பாட்டத்தைக் கொடிய காதலர்க்கு எடுத்துரைத்து அதனால் நீ பெருமை பெற மாட்டாயா? 1237 (காதலன் கூறுவதாக) அவளைத் தழுவிய கைகளை யான் சிறிது நெகிழ்க்க, பசுமையான வளையலணிந்த அப்பேதைப் பெண்ணின் நெற்றி பசப்புற்றது. 1238 தழுவியபோது சிறிது இடைவெளி ஏற்படக் குளிர்ந்த காற்று புகவும் பொறுக்காத அப் பேதையின் பெரிய குளிர்ந்த கண்கள் பசப்புற்றன. 1239 அவளது ஒளியுடைய நெற்றி பசப்புற்றதைப் பார்த்து அவள் கண்ணின் பசப்பு துன்புற்றது. 1240