பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 267 126. நெஞ்சடக்கத்தின் உறுதி தளர்தல் நாணம் என்னும் தாழ்ப்பாள் போட்ட நிறை என்னும் கதவைக் காமம் என்னும் கோடரி உடைக்கிறது. (நிறை - நெஞ்சை அடக்கி நிறுத்துதல்) 1251 காமம் என்னும் ஒரு பாவி கண் இல்லாதது என் நெஞ்சை நள்ளிரவிலும் அது வேலை வாங்குகிறது. 1.252 யான் காமத்தை மறைக்கவே முயல்கிறேன். ஆனாலும் அது, என் குறிப்பின்படி நடவாமல் தும்மல் போல் திடீரெனத் தானே வெளியாகி விடுகிறது. 1253 யான் நிறையுடையவள் என்றே எண்ணுகிறேன். ஆனால் என் காமமோ மறைவான அறையைக் கடந்து அம்பலத்திற்கு வந்து விடுகிறது. 1254 தம்மை வெறுத்து முனிந்தவரின் பின்னே செல்லாத வீறாப்புத் தன்மை, காம நோய் கொண்டவர்கள் அறிந்து கடைப்பிடிக்கக் கூடிய ஒன்றன்று. 1255 வெறுத்தவர்.பின் செல்ல வேண்டி யிருப்பதால், என்னை அடைந்த இக் காமநோய் இரங்கத்தக்கதேயன்றி வேறு எத்தகையது 1256 விரும்பிய காதலர் நாம் விரும்புகின்றவற்றைச் செய்வாராயின், காமத்தால் நாணுதல் என்னும் ஒரு நிலையை நாம் அறிய வேண்டி வராது. 1257 பல மாயங்கள் செய்யும் கள்வனாகிய காதலரின் பணிவான பொய்ம்மொழி, நம் பெண்மையாகிய அரணை அழிக்கும் ஒரு படைக்கலம் அல்லவா? 1258 காதலருடன் ஊடல் கொள்வேன் என்று சென்றேன்; ஆனால், என் நெஞ்சு அவருடன் கலந்து நின்றதைக் கண்டு யானும் அவரைத் தழுவிக் கொண்டேன். 1259 கொழுப்பை நெருப்பில் இட்டாற்போல் உருகுகிற கோழை உள்ளம் உடையவர்க்கு, காதலருடன் ஊடல் கொண்டு அவ்வூடலில் நிலைத்து நிற்போம் என்னும் உறுதி இருக்க முடியுமா? 1260