பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 273 129. புணர்ச்சிக்கு விரைதல் நினைத்த அளவிலே களிப்புறுதலும், கண்ட அளவிலே மகிழ்ச்சியடைதலும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்குத்தான் உண்டு. 1281 பனையளவு பெரிதாகவும் காமம் மிகுமாயின், காதலரோடு தினையளவும் ஊடல் கொள்ளாதிருக்க வேண்டும். 1282 காதலர் நம்மை விரும்பாமல் அவர் விரும்பியவாறே நடந்து கொண்டாலும், அவரைக் காணாமல் கண்கள் அமைதி பெறா. 1283 தோழியே காதலருடன் ஊடல் கொள்வதற்காக யான் சென்றேன்; ஆனால், என் நெஞ்சு அவ்வூடலை மறந்து கூடலில் முனைந்து விட்டது. \ 1284 கண்ணுக்கு மை தீட்டும்போது தீட்டுங் கோலைக் கண் காணாதது போல, யான் கணவரை நேரில் காணும் போது அவரது பழியைக் காண்பேனிலேன். 1285 காதலரை நேரில் கண்டால் அவர் தவறுகளை யான் காணேன் நேரில் காணாதபோதோ, அவருடைய தவறு அல்லாத நற்பண்பைக் காணேன். 1286 இழுத்துச் சென்று விடும் என்று அறிந்தும், வெள்ளத்தில் பாய்பவரைப் போல, ஊடல் நிலைக்காமல் பொய்த்து விடும் என அறிந்தும் ஊடுவது ஏன்? 1287 காதல் திருடா இழிந்த துன்பங்களை விளைத்தாலும் கட்குடியர்க்குக் கள் விருப்பளிப்பது போல், எனக்கு உன் மார்பு விருப்பளிக்கிறது. 1288 காமம் மென்மையான மலரை விட மென்மையானது; அதன் மென்மைத் தன்மையை அறிந்து நடப்பவர் உலகில் சிலரே. 1289 (தலைவன் கூற்று) என் காதலி புணர்வதற்கு என்னை விட விரைவு கொண்டிருந்தும், வெளிக்கு மட்டும் கண்ணால் ஊடியவள் போல் காட்டி, பின் செய்வதறியாது கலங்கினாள். 129 O