பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 இன்பம் 130. நெஞ்சொடு புலத்தல் அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது. 1291 உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனக் சேறிஎன் நெஞ்சு. 1292 கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல். 1293 இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று. 1294 பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் - அறாஅ இடும்பைத் தென் நெஞ்சு. 1295 தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததுஎன் நெஞ்சு. 1296 நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சிற் பட்டு. 1297 எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. 1298 துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சம் துணையல் வழி. 1299 தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி. 13OO