பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 இன்பம் 131. புலவி புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. 13O1 உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். 13O2 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். 13O3 ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று. 13O4 நலத்தகை நல்லவர்க்கு ஏனர் புலத்தகை பூஅன்ன கண்ணா ரகத்து. 13O5 துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. 13O6 ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று. 13O7 நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி. 13O8 நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது 1309 ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா. 131O