பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவியல் 45 17. பொறாமை கொள்ளாமை தன் நெஞ்சில் பொறாமையில்லாத தன்மையை ஒருவன் ஒழுக்க நெறியாகக் கொள்வானாக. 16.1 எவரிடத்தும் பொறாமை கொள்ளாதிருக்கப் பெற்றால், அடைய வேண்டிய சிறந்த பேறுகளுக்குள் அப்பண்பை ஒத்த பேறு வேறில்லை. 162 தனக்காக அறத்தையும் ஆக்கத்தையும் விரும்பாதவன் என்று சொல்லப்படுபவனே, பிறன் வளர்ச்சியைக் கண்டு போற்றாது பொறாமைகொள்வான். 163 தவறான வழியில் துன்பம் உண்டாதலை அறிந்திருத்த லால், பெரியோர் பொறாமையால் அறமல்லாத தீமைகளைச் செய்யார். 164 பொறாமை யுடையவர்க்குப் பகைவர் கேடு செய்யத் தவறினாலும் தான் கேடு தருவதாகிய அப்பொறாமை யொன்றே பகையாகப் போதும். 1.65 ஒருவர் மற்றொருவருக்கு உதவுவதைக் கண்டு பொறாமைப்படுபவனுடைய சுற்றத்தாரும் உடையும் உணவும் இல்லாமல் கெட்டழிவர். 166 திருமகள் பொறாமைக்காரனைக் கண்டு புழுங்கி அவனுக்குத் தன் தமக்கையாகிய மூதேவியைக் காட்டி விடுவாள். 167 பொறாமை என்னும் ஒரு கொடிய பாவி, பொறாமை கொண்டவனது செல்வத்தை யழித்து அவனைத் தீய வழியில் திருப்பி விடும். 168 பொறாமை கொண்ட நெஞ்சத்தானது வளர்ச்சியும், பொறாமையற்ற நேர்மையாளனது கேடும் இயற்கைக்கு மாறாதலின் ஆராயப்பட வேண்டியவை. 169 பொறாமையுற்று அகலமாய் வளர்ந்தாரும் இல்லை; அப்பொறாமை இல்லாதவரானதால் வளர்ச்சியினின்றும் நீங்கினவரும் இல்லை. 17 O