பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவியல் 57 23. ஈதல் ஏழைக்கு ஒரு பொருள் ஈதலே ஈகை, மற்றவர்க்கு ஈவதெல்லாம் பதிலுக்குப் பதில் எதிர்பார்த்துக் கொடுக்கும் இரவல் தன்மையுடையது. 221 வாங்குதல் நன்னெறி என்று எவரேனும் சொன்னாலும், அது தீயது; கொடுப்பதால் மேலுலகம் கிடைக்காது என்றாலும் கொடுத்தலே நல்லது. 222 என்னிடம் இல்லை என்னும் துன்ப மொழியைக் கூறி மறுக்காது, கொடுக்கும் பண்பு, நற்குடியில் பிறந்தவனிடத்தே இருக்கும். 223 கொடுக்கும்படி (யாசித்தவரின்) கேட்டவரின் நிறைவான இனிய முகத்தைக் காணும் வரைக்கும் கேட்கப்பட்டவரின் நிலை துன்பமானது. 224 எதையும் தாங்கும் வலிமை உடையவர்க்கு உண்மை யான வலிமை பசியைத் தாங்கிக் கொள்வதுதான். அவ்வலிமையும் பிறர் பசியை உணவு தந்து போக்குபவர்க்குப் பிற்பட்டதே. 225 வசதியற்றவரின் கடும் பசியைப் போக்க வேண்டும்; அதுதான். பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளை வைத்துக் காக்கும் வழிமுறையாகும். 226 பலர்க்கும் பங்கிட்டுத் தந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கெட்ட நோய் நெருங்குவதில்லை. 227 தமது உடைமைப் பொருளைப் பிறர்க்கு ஈயாது வைத்திருந்து பின்பு இழந்து விடும் கொடியவர், பிறர்க்கு உதவி மகிழும் உவகையை அறியாரோ? 228 தம் வயிற்றைக் குறைவின்றி நிரப்புவதற்காகத் தாம் மட்டும் தனிமையராய் உண்ணுதல், பிறரிடம் சென்று இரத்தலினும் இழிந்தது. . . . . 229 சாவை விடத் துன்பம் தருவது வேறொன்றும் இல்லை; அச்சாவுங் கூட ஒருவர்க்கு ஒன்று உதவ முடியாதபோது இனியதே. 23 O