பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவறவியல் 65 27. தவம் (நோன்பு) தமக்கு நேர்ந்த துன்பத்தைத் தாங்கிக் கொள்ளுதலும், எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவினதே தவத்திற்கு வடிவு ஆகும். 261 உண்மையான நோன்பிகளுக்கு நோன்பு பொருந்தும், அல்லாதார் அந்நோன்பைக் கைக் கொள்வது வீணே. 262 நோற்கும் துறவிகளுக்கு ஊட்டம் தர வேண்டியே மற்ற இல்லறத்தார் தவத்தை மறந்தார்கள் போலும்! 263 கெட்ட பகைவரை அழித்தலும் இன்புறு நண்பரை ஆக்குதலும் எண்ணிய அளவில் தவ வன்மையால் முடியும். 264 விரும்பியவற்றை விரும்பியவாறு பெற முடியுமாதலால் இவ்வுலகில் தவம் முயன்று செய்யப்பட வேண்டியதாம்! 265 தவம் செய்பவரே தமக்கேற்ற நற்செயல் செய்பவராவர்; மற்றையோர் உலகியல் ஆசைக்குள் அகப்பட்டு வீண் செயல் செய்பவரே. 266 புடம் போட்டுக் காய்ச்சக் காய்ச்ச ஒளிமிகும் பொன்னைப் போல், துன்பம் வருத்த வருத்த நோன்பு செய்பவர்க்கு அறிவொளி பெருகும். 267 நோன்பின் சிறப்பால் தன் உயிர்க்குத் தான் என்ற அகந்தை இன்றி நீங்கப் பெற்றவனை உலகத்துள்ள மற்ற உயிர்களெல்லாம் வணங்கும். 268 தவத்தினால் மிக்க வலிமை பெற்றவர்க்கு எமனைக் கடந்து வெல்லுதலும் கைகூடப் பெறும். 2 Ꮾ 9 உலகில் பலர் இல்லாதவராகத் துன்புறுதற்குக் காரணம், நோற்பவர் சிலர் மட்டும் இருக்க, நோற்காதவர் மிகப் பலராயிருப்பதே. 27 O