பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவறவியல் 71 30. உண்மை உடைமை உண்மை எனப்படுவது யாதென்றால், யார்க்கும் யாதொரு தீமையும் தராத சொற்களைப் பேசுதலாம். 291 யார்க்கும் தீங்கு தராத நன்மையைக் கொடுக்கும் என்றால், பொய்ச் சொற்களும் உண்மையின் இடத்தில் வைத்து எண்ணத் தக்கனவாம். 292 தன் மணமறிந்த பொய்யைப் பேச வேண்டா அவ்வாறு பொய் பேசின், அதனால் தன் மனமே தன்னைச் சுட்டு வருத்தும். 29.3 ஒருவன் தன் மணமறியப் பொய் பேசாது ஒழுகினால், உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் புகழுடன் நிலைத்திருப்பான். 29.4 ஒருவன் தன் உளத்தொடுங் கூடி உண்மை பேசினால், தவத்துடன் தானமும் ஒருசேரச் செய்வாரினும் உயர்ந்தவனாவான். 295 பொய்யாதிருத்தலைப் போன்ற புகழ் ஒருவனுக்கு வேறில்லை; அப்பொய்யாமை அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லா அறங்களையும் ஈயும். 296 பொய்யாத பண்பை உறுதியாகக் கடைப்பிடித்தால், வேறு அறங்கள் செய்யவே செய்யாதிருந்தாலும் தவறில்லை, நல்லதே. , 297 உடலின் வெளித் தூய்மை தண்ணீரால் செய்யப்படும்; உள்ளத் தூய்மையோ உண்மை பேசுதலால் தான் உண்டாக முடியும். 298 உயர்ந்தோர்க்குப் புகழொளி வீசும் பொய்யாமை என்னும் விளக்கே உண்மையான விளக்காகும்; மற்ற விளக்குகள் எல்லாம் விளக்குகள் ஆகா. 299 யாம் உண்மையாய்க் கண்ட பண்புகளுள் வாய்மை என்னும் பண்பை விட எவ்வகையிலும் நல்லதாக வேறு ஒரு பொருள் இல்லை. SO O