பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அறம் 37. அவா அறுத்தல் அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பினும் வித்து. 361 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். 362 வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்பது இல். 363 தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். 364 அற்றவர் என்பார் ஆவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர். 365 அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா. 366 அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும். 367 அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம்அஃ துண்டேல் தவாஅது மேன்மேல் வரும். - 368 இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின். 369 ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். 37Ο