பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழியல் 87 38. ஊழின் வலிமை கைப்பொருள் வளர்வதற்குரிய நல்லூழ் இருந்தால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும்; தொலைவதற்குரிய தீயூழ் இருந்தால் சோம்பல் உண்டாகும். S71 பொருளை இழக்கச் செய்யும் தீயூழ் அறியாமைக்கு உள்ளாக்கும் ஆகப்படுத்தும் நல்லூழ் வந்தாலோ அறிவை அகலமாகப் பெருக்கும். 372 நுட்பமான கருத்துள்ள நூற்கள் பலவற்றை ஒருவன் கற்றாலும், மற்றபடி ஊழிற்கு ஏற்ப அவனுக்கு முன்னமே உள்ள அறிவுதான் முற்பட்டுத் தோன்றும். 373 உலகின் இயல்பு இருவேறு வகையானது. (அதாவது அறிவு இருந்தால்தான் செல்வம் இருக்கும் என்பதில்லை) ஊழால் செல்வம் உடையவராயிருப்பதும் அறிவுடையவரா யிருப்பதும் வெவ்வேறானவை. S74 செல்வம் தேடுங்கால், தீயூழால் நல்லவையெல்லாம் மை பயப்பனவாக மாறும். நல்லூழால் தீயவைகளும் நன்மை பயப்பனவாக மாறும். こ75 நல்லுழுக்கு உரியவை யல்லாத பொருள்களை வருந்திக் காத்தாலும் வளராவாம்; ஊழின்படி தமக்குரிய பொருள் களை வெளியில் கொண்டு போய்க் கொட்டினாலும் போகாவாம். 376 கோடிக் கணக்கான செல்வங்களைக் குவித்து வைத்திருப் பவர்களும், இன்னார்க்கு இவ்வளவு என்று வகுத்த இறைவன் வகுத்த அளவுக்கு மேல் நுகர முடியாது. 377 ஊழின்படி வரக் கூடிய துன்பங்கள் துறவு கொள்வதால் வந்துறுத்தாது நீங்குமென்றால், ஊட்டமில்லாத ஏழைகள் துறவை மேற்கொள்வரே! 378 நல்லூழால் நன்மை வருங்கால் இன்பமாய் நுகர்பவர், தீயூழால் தீமை வருங்கால் துன்புறுவது ஏன்? さ79 ஊழினும் மிகுந்த வலிமையினவாய் வேறு எவை உள்ளன? ஊழை வெல்ல வேறொரு வழியை எண்ணினாலும் ஊழே முந்திக் கொள்ளும். 38 O