பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 95 41. கல்வி கற்காமையின் இழிவு நிரம்பிய நூலறிவு இன்றிக் கற்றோர் அவையில் பேசுதல், சூதாடுதல், அரங்கக் கோடு கிழிக்காமல் சூதாடு காயை உருட்டி விளையாடுவது போன்றதாம். 401 கல்வியில்லாதவன் கற்றோர் அவையில் பேச விரும்புதல், இரண்டு முலைகளும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது. 4 O2 படித்தவர் முன்னே வல்லவர் போல் வாய் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகவும் நல்லவரே. 403 படிக்காதவனது அறிவு ஒர நேரம் மிகவும் நன்றாயிருப்பது போல் காணப்படினும் கல்வியறிவுடையவர் அதனை உயர்ந்ததாக ஏற்றுக் கொள்ளார். 4.04 கல்லாதவனது தடபுடல் தன்மை, கற்றவர் சார்ந்து பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் இருக்குமிடம் தெரியாமல் சோர்வுபட்டு விடும். 4 O 5 கற்காதவர் உயிரோடு இருக்கின்றனர் என்ற அளவினரே தவிர மற்றபடி ஒரு பயனும் விளைக்காத களர் நிலத்திற்கு ஒப்பானவரே. 4 O 6 நுட்பமான சிறப்பான ஆராய்ச்சி அறிவு இல்லாதவனது அழகுப் பொலிவு, மண்ணால் அழகாகச் செய்யப்பட்ட பொம்மையின் பொலிவு போன்றது. 4 O'F கல்லாதவரிடம் உள்ள செல்வம், கற்றுள்ள நல்லவரிடம் உள்ள ஏழ்மையை விட வெறுக்கத்தக்கது. 4 O 8 கல்லாதவர் மேல் குலத்தில் பிறந்திருந்தாலும், கீழ்க் குலத்தில் பிறந்தும் கற்றிருப்பவரது அளவுக்குப் பெருமை இல்லாதவரேயாவர். 4 O 9 அறிவு விளங்கச் செய்யும் நூற்களைக் கற்றவரை நோக்கக் கல்லாத மற்றவர், மாந்தரை நோக்க விலங்குகளுக்கு உள்ள அறிவு வேறுபாடு உடையவர் ஆவர். - 410