பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 97 42. செவியால் கேட்டறியும் சிறப்பு செல்வங்களுள் செவியால் கேட்டறியும் செல்வம் ஒருவகைச் செல்வமாகும். அச்செல்வமோ செல்வங் களுக்குள் எல்லாம் தலைமையானது மாகும். 4 11 கேட்டலாகிய உணவு காதுக்குக் கிடைக்காத போது மட்டும், (பிறகு கேட்கும் தெம்பு பெற) சிறிதளவு வயிற்றுக்கும் உணவு இடப்படலாம். 4 12 செவியால் உண்ணும் கேள்வி உணவு உடையவர் நிலவுலகில் இருந்தபடியே, வேள்வி (யாகத்து) உணவு உண்ணும் தேவர்க்கு நிகராவர். 413 ஒருவன் தானே கற்க முடியாவிடினும், கற்றவர் சொல்லும் கருத்துக்களைக் காதால் கேட்பானாக அக்கேள்வி யறிவு, வாழ்வில் சோர்வு ஏற்படும்போது அவனுக்கு ஊன்றுகோல் போல் துணைபுரியும். . 4.14 ஒழுக்கமுடைய உயர்ந்தோர் வாய்மொழி, வழுக்குதல் உடைய தரையிலே நடக்க உதவும் ஊன்றுகோல் போன்றதாம். - 4 15 எவ்வளவு சிறிதளவாயினும் நல்ல கருத்துக்களைக் கேட்க வேண்டும்; அந்த அளவுக்கே கேள்வி நிறைந்த பெருமையளிக்கும். 41.6 நுட்பமாய் உணர்ந்து நிறையப் பெற்ற கேள்வியறிவினர், தவறியுணர்ந்தும் மடமையானவற்றைப் பேசார். 4.17 கேள்வி என்னும் கருவியால் துளைக்கப்படாத காதுகள், இயற்கையாய்த் துளை பெற்றுக் கேட்கும் வன்மை பெற்றிருந்தாலும், கேட்காத செவிட்டுத் தன்மை உடையவனவே. 4.18 நுண்ணிய கேள்வியறிவு பெறாதவர், வணங்கிப் பேசும் வாயுடையவராயிருத்தல் இயலாது. 4.19 காதால் கேள்விச் சுவை நுகராமல் வாய்ச்சுவை ஒன்று மட்டும் நுகரும் இழி மக்கள் செத்தால்தான் என்ன? உயிரோடு வாழ்ந்தால்தான் என்ன? 42O