பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ஐம்புலன்களும் உணர்வில் உயர்நிலையில் இருப்பதால் தான், பெற்றோர்களின்ஆஇன்பம் பெருக்கெடுத்துக் கொள்கிறது. பெற்றோர்களைக் கண்டும் அவர் பேசக் கேட்டும் கொடுப்பதைச் சுவைத்தும் ரசித்தும் செய்கிற கோலாகலக்காட்சிகள்தாம் குழந்தை

இன்பத்தைக் கோடியாய்ப் பெருக்கிக் காட்டுகிறது. அதனால்தான் மெய் தீண்டல் என்றார். உண்மையான தொடர்பு உன்னதமான உறவு என்றார். நலமான குழந்தைகளே வளமான வாழ்வுக்கு ஆதாரம். 66. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் பொருள் விளக்கம்: தம் = (இயற்கையின்) கொடையான மக்கள் = குழந்தைகளின் மழலைச் சொல் = இளமை நிரம்பாத மெல்லிசைச் சொற்களை கேளா = கேட்காத தவர் உலகைத் துறந்த முனிவரும், உறவைத் துறந்த பகைவரும், குழந்தையற்ற உற்றோரும் தாம் குழல் இனிது = குழலோசை இனிது யாழ் இனிது என்ப = யாழ் இசை இனியது என்று கூறுவார்கள் சொல் விளக்கம்: கேளா தவர் என்பதை கேளாதவர் என்று இணைத்துக் கேட்காதவர்கள் என்று பொருள் தந்திருக்கின்றார்கள். தவர் என்றால் முனிவர், பகைவர், உற்றோர் என்று பல பொருட்கள் உண்டு. தம் என்பது தமது என்றும், கொடை என்றும் பொருள் உண்டு. மழலை என்பது முற்றாத இளஞ்சொல். இசையால் பொழியும் எழுத்தோசையாகும். முற்கால உரை: தம் மக்கள் அறிவுடைமையானது தம்மை விட உலகத்து உயிர்களுக்கு எல்லாம் இனிதாயிருக்கும் என்பதாம். தற்கால உரை: புல்லாங்குழலின் ஒசையை விட, யாழின் இசையை வி குழந்தைகளின் மழலைச்சொற்கள் பெற்றோர்க்கு மிக்க இன்பத்தைப் பயக்கும்.